தமிழக பள்ளிக்கல்வி துறையில், நான்குஇயக்குனர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்றது முதல், கல்வி திட்டங்களிலும், நிர்வாக அமைப்புகளிலும், அவ்வப்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன.
துறையின் உயர் பதவியான இயக்குனர்கள் முதல், கீழ் மட்ட உதவியாளர்கள் வரை, திடீர் மாற்றங்கள் நிகழ்வது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு அதிகாரியும், 'தற்போதைய பதவிகளில் நாளை இருப்போமா' என்ற நம்பிக்கையின்றி, பணிகளை தொடர்கின்றனர்.
இந்த வரிசையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் நான்கு பேர், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், அமைச்சருக்கு நெருக்கமான, அவரது மாவட்டத்தை சேர்ந்த, நேர்மையானவர் என, பெயர் பெற்ற அதிகாரியான கார்மேகம், தொடக்க கல்வி பொறுப்பில் இருந்துமாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு, பணிகளே இல்லாத, ஓரங்கட்டப்பட்ட இடமான, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக