நாளை துவங்க இருந்த, பெரியார் பல்கலை தொலைநிலை கல்வி தேர்வுகள், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பெரியார் பல்கலை தொலைநிலை கல்வியில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் என, 150க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், 192 தொலைநிலை கல்வி மையங்கள் செயல்படுகின்றன.
இதில் படிக்கும் மாணவர்களுக்காக, ஆண்டுதோறும், டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, டிச., 28ல், தொலைநிலை கல்வி தேர்வுகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் அட்டவணை, பின் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக