மாணவர்களுக்கு, நல்லிணக்கம், ஒத்துழைப்பு, அமைதி உள்ளிட்ட உயர் பண்புகளை போதித்து, அவர்களை விழிப்புணர்வு பெற்ற பிரஜைகளாக மாற்றும் நோக்கில், சிறப்பு பயிற்சி அளிக்க,
ராமகிருஷ்ணா மிஷனுடன், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:டில்லி, ராமகிருஷ்ணா மிஷன், மாணவர்கள், ஆசிரியர்களுக்காக, 'விழிப்புணர்வு பெற்ற பிரஜை திட்டம்' தயாரித்துள்ளது. 6 - 8 வகுப்பு மாணவர்களுக்காக, மூன்று ஆண்டுகள், இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த வகுப்புகளில், நல்லிணக்கம், ஒத்துழைப்பு, அமைதி உள்ளிட்ட, உயர் பண்புகள் போதிக்கப்படும்.ஆண்டுக்கு, 16 வகுப்புகளில், மாணவர்களின் பண்புகளை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியின் துவக்கத்தில் இரண்டு நாட்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக, ராமகிருஷ்ணா மிஷனுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக