தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளியை தேர்வு செய்து புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு செய்யப்படும் இந்த பள்ளிகளில் 3ம் பருவத்தேர்வுகளை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வகுப்பு வாரியாக வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. டிஜிட்டல் மயமாகும் 3ம் பருவத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் படங்கள், வண்ணங்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது.
கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாக்கப்படும். இதற்காக பிரத்யேக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக