லேபிள்கள்

26.12.17

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து!!!

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் 
ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


 முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாடத்துடன் நற்பண்புகளை கற்பிக்க ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக