அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்காக தயார் செய்ய மேலும் 312 பயிற்சி மையங்கள் துவக்கவும், பயிற்சி ஆசிரியர் களுக்கு மதிப்பூதியம் வழங்கவும் அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை அனைத்து போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் ஒன்றியத்திற்கு ஒரு போட்டித் தேர்வு பயிற்சி மையம் 'தொடுவானம்' என்ற பெயரில் அமைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் அறிவித்தார். இதன்படி மாநிலம் முழுவதும் 100 போட்டி தேர்வு பயிற்சி மையங்களை முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்தார்.
இங்கு கம்ப்யூட்டர், எல்.சி.டி., புராஜெக்டர் வசதிகள் செய்யப்பட்டன. தனியார் கல்வி நிறுவனம் மூலம் வாரந்தோறும் ஆன்- லைனில் பயிற்சி அளிக்கப் பட்டது. பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியமிக்க வில்லை.இந்நிலையில் அனைத்து ஒன்றியங் களிலும் போட்டித்தேர்வு மையங்களை உடனே துவக்கவும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சிவழக்கும் ஆசிரியர்களுக்கு மதிப் பூதியமாக மையம் ஒன்றுக்கு ரூ.58,800யும், கம்ப்யூட்டர், எல்.சி.டி. புராஜெக்டர் வாங்க ரூ. 1,66,000 வீதம் 314 மையங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட மையத் தின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கபடும். மையங்களில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் வாரம் ரூ. 2,100 வீதம் செலவு செய்ய அனுமதிக் கப்பட்டுள்ளது. இதற்கான செலவின பற்று சீட்டுகளை முறையாக பராமரித்து தணிக்கைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக