'நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து மாநில பாடத்திட்டங்களும் இணைந்த, 'சிலபஸ்' பின்பற்றப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வாயிலாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விதிகளை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., வகுக்கிறது. தேர்வுக்கான சட்டங்கள் மற்றும் அரசாணைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு பொறுப்பான, மத்திய மனிதவள அமைச்சகம் தலையிடுவதில்லை. சில ஆண்டுகளாக, எம்.சி.ஐ., வகுத்த பாடத்திட்டத்தின்படி, சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் இணைத்தே, நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படியே, அனைத்து மாநில மாணவர்களும், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், 'இந்த ஆண்டு நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமே பின்பற்றப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு குழு, நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில், '2017ல் பின்பற்றப்பட்ட, அதே பாடத்திட்ட முறைகளின்படியே, இந்த ஆண்டும், நீட் தேர்வு நடத்தப்படும்.
'அதில், எந்த மாற்றமும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக, தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 73 ஆயிரம் பேர் உட்பட, 1.5 லட்சம் மாணவர்கள், தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக