லேபிள்கள்

24.1.18

பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கூடம், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


குறிப்பாக தமிழகம் முழுவதும் மாணவ- மாணவிகள் அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும். தனியார் கல்லூரி மாணவர்களுக்கான சலுகை பயண அட்டை பழைய அடிப்படையிலேயே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் (அரசு மற்றும் தனியார் பள்ளி) 100 சதவீதம் இலவச பயண சலுகையின் மூலம் 22 லட்சத்து 66 ஆயிரத்து 483 பயண அட்டைகள் (பஸ் பாஸ்) வழங்கப்பட்டுள் ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.

* அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி, அரசு பாலிடெக் னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 100 சதவீதம் இலவச பயண சலுகையின் மூலம் முறையே 2 லட்சத்து 13 ஆயிரத்து 810, 35 ஆயிரத்து 921, 28 ஆயிரத்து 348 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.

* தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 3.21 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையுடன் கூடிய பயண அட்டைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்.

மேற்படி பயண அட்டைகளை வழங்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யும் பொருட்டு 2017-18-ம் ஆண்டில் 540.99 கோடி ரூபாயை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கி உள்ளது.

பொதுமக்களுக்கு எழும் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே இருந்த சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளுடன், கூடுதலாக 498 சொகுசு பேருந்துகளை சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றி அமைத்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக