லேபிள்கள்

27.1.18

பத்து நாட்கள் தாமதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கில் சேர்ந்தது பொங்கல் போனஸ்

பத்து நாட்கள் தாமதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், 'சி, டி' பிரிவினருக்கு மட்டும், ஊக்க ஊதியமாக, 3,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம், 'ஏ, பி' பிரிவினருக்கு வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம், இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
போனஸ் அறிவிக்கப்பட்டோருக்கு, பொங்கல் பண்டிகை நாளான, ஜன., 15 வரை, வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நிதி பற்றாக்குறையால் போனஸ் பணம் வழங்க தாமதமானது. இது குறித்து, ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கி கணக்கு எண்களை சேகரித்து, அதில், தாமதமின்றி பணம் செலுத்த, கருவூலத்துறை அதிகாரிகளுக்கு, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொங்கல் போனஸ் தொகை, நேற்று முன்தினம், ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக