மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும், அதன் சுற்றறிக்கை,
'லீக்' ஆகியுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, மே மாதம் நடக்க உள்ள தேர்வு குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகவில்லை.
இந்நிலையில், மே, 6ல், நீட் தேர்வு நடக்கும் என, செய்திகள் வெளியாகின. https://medical.aglasem.com என்ற தனியார் இணையதளத்தில், இந்த செய்தி இடம் பெற்றது. இதை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளதாக, 'டிவி'க்களில், நேற்று செய்தி வெளியானது. நீட் தேர்வு குழுவின் இணை செயலர், ஸன்யம் பரத்வாஜ் கையெழுத்திட்ட சுற்றறிக்கையின், ஒரு பகுதி மட்டும், தனியார் இணையதளத்தில் வெளியானது. அதில், நீட் தேர்வை, மே, 6ல் நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேதி அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக