லேபிள்கள்

27.1.18

ரயில் வடிவ அங்கன்வாடி மையத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான்று

ரயில் பெட்டி வடிவத்தில் வண்ணம் தீட்டப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழை, குடியரசு தின விழாவில், நெல்லை கலெக்டர் வழங்கினார்.
திருநெல்வேலியில், நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர், சந்தீப் நந்துாரி, தேசியக் கொடியை ஏற்றினார். பின், 53 பயனாளிகளுக்கு, 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நெல்லை, ரெட்டியார்பட்டி அங்கன்வாடி குழந்தைகள் மையத்திற்கு, குழந்தைகள் மகிழும் வண்ணம், ரயில் பெட்டியை போல வர்ணம் பூசப்பட்டு உள்ளது. அந்த மையத்திற்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழை, கலெக்டர், சந்தீப் நந்துாரி, மைய பணியாளர், முருகசெல்வியிடம் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக