லேபிள்கள்

24.1.18

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு

தேசிய தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றவும், ஜூனியர் ஆய்வு மாணவராக சேரவும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ அமைப்பு இந்த தேர்வை கண்காணித்து வருகிறது. 

இந்த தேர்வு முறையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதுவோருக்கும் வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் நெட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதே போல் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக