டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் - 4 பதவியில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு, 2016 நவ., 6ல், எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. அதில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, 53 காலியிடங்களை நிரப்ப, 28 முதல், மார்ச், 1 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தட்டச்சர் பதவியில், 15 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 1, 2ல், சான்றிதழ் சரிபார்க்கப் படும். இதற்கான கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக