'பொதுத் தேர்வில் தில்லு முல்லு செய்யாமல், முறையாக பணியாற்ற வேண்டும்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள்
அறிவுறுத்திஉள்ளனர்.பொதுத் தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக வழிகாட்டுதல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை மாவட்ட கூட்டம், சென்னையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் தலைமை வகித்தார்.இதில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பேசியதாவது:
தேர்வு பணிகளில், முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். எந்த தேர்வு மையத்திலும் பிரச்னைகள் ஏற்படாமல், சுமுகமாக தேர்வுகளை நடத்த வேண்டும்.
மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடாதபடி, ஆசிரியர்கள் முழு கவனத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டிலும், கவனமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.பின், அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பாரபட்சமின்றி, மாணவர்களை அணுக வேண்டும். தேர்வு பணிகளில் தில்லுமுல்லுக்கு இடமின்றி, நேர்மையாக செயல்பட வேண்டும், என்றனர்.
சென்னையில் 1.50 லட்சம் பேர்!
சென்னை வருவாய் மாவட்டம், நான்கு கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில், பிளஸ் 2வில், 50 ஆயிரத்து, 591 பேர்; பிளஸ் 1ல், 49 ஆயிரத்து, 440 பேர் மற்றும், 10ம் வகுப்பில், 50 ஆயிரத்து, 381 பேர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 412 மாணவ - மாணவியர் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். 10ம்
வகுப்புக்கு, 211 தேர்வு மையங்களும்; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 152 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக