தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங்,
6ம் தேதி நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரியை, தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், 2016 -17 கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 144 எம்.பி.பி.எஸ்., மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்ளும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், 144 மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்வதற்கான கவுன்சிலிங், 6ம் தேதி காலை, 11:30 மணிக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்க உள்ளது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக