பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் முதல் தாள் கேள்விகள் எளிதாகவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், முத்தானதாக இடம்
பெற்றிருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 தமிழ் முதல் தாள் உட்பட, மொழி பாடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது. இதில், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழரசி, பிரசிடென்சி பள்ளி, வணிகவியல் பிரிவு: தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது. பெரும்பாலும், பள்ளியில் கற்று கொடுத்த பாடங்களில் இருந்தே, கேள்வி கள் இடம் பெற்றன. 'சென்டம்' கிடைக்காவிட்டாலும், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் கிடைக்கும்.
புனிதா, பிரசிடென்சி பள்ளி, உயிரியல் பிரிவு: கேள்விகள் மிக எளிமையாக இருந்தன. ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில் படித்தவர்கள், எளிதில் இருநுாறுக்கு இருநுாறு, பெறலாம்.
ஸ்ரீதேவி, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி, உயிரியல் பிரிவு: பிரெஞ்ச் மொழி பாட தேர்வை எழுதினோம். கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்தது. புத்தகத்தில், பாடத்தின் பின்பக்க கேள்விகள், அதிகமாக கேட்கப்பட்டிருந்தன.
முகமது இர்பான், ஜெகதாரண்யா மற்றும் கமலேஷ், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, உயிரியல் பிரிவு: தமிழ் தேர்வு வினாத்தாளில், எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெற்றன. ஆசிரியர்கள், வகுப்பில் குறிப்பிட்ட பெரும்பாலான கேள்விகள், வினாத்தாளில் இருந்தன. தேர்வு குறித்த பதற்றம் போய் விட்டது.
பிரவீன் ஆதித்யா, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி: நான் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதினேன். கடந்த ஆண்டுகளில், சமஸ்கிருத பாடங்களில் கடினமான கேள்விகள் இடம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு, சமஸ்கிருத வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது. சென்டம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
ராஜேந்திரன், தமிழ் ஆசிரியர், மகரிஷி வித்யாமந்திர் பள்ளி: மாணவர்கள் தேர்வை எப்படி எழுதியுள்ளனர் என்பதை கேட்க, தேர்வு மையத்துக்கு வந்தேன். அவர்கள் உற்சாகமாக உள்ளனர். சில கேள்வி களை மட்டும், கொஞ்சம் மாற்றி கேட்டுள்ளனர்; அதையும் மாணவர்கள் புரிந்து எழுதிஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக