'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு,
நாளை மறுநாள் பதிவு முடிகிறது. நாடு முழுவதும், அனைத்து அரசு,
தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்.,
மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் நேரடி
கட்டுப்பாட்டில் உள்ள, 'எய்ம்ஸ்' மற்றும், 'ஜிப்மர்' கல்லுாரிகளில்சேருவதற்கு
, தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, எய்ம்ஸ்
நுழைவு தேர்வு, மே, 26, 27ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு,
பிப்.,5ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் மாலை, 5:00 மணியுடன்
முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை, www.aiimsexams.org என்ற,
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக