லேபிள்கள்

4.2.18

சி.பி.எஸ்.இ 'தேர்வு முறையில் பழைய நிலை தொடரும்'

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 
ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை, மதிப்பீட்டு முறை என்ற அறிவிப்பு 
திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், 

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 6 - 8ம் வகுப்பு வரை,
 ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்தவும், மதிப்பீட்டு 
முறையிலும் ஒரே நடைமுறையை பின்பற்றவும், அந்த வாரியம் 
உத்தரவிட்டிருந்தது. இதற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு 
கிளம்பியது.

எனினும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட முறையில், 10ம் வகுப்புக்கு மீண்டும் 
பொதுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், மாணவர்களின் 
தன்னம்பிக்கையையும், திறனையும் மேம்படுத்தவே, இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ.,யின் அறிவிப்புக்கு, தேசிய குழந்தைகள் 
பாதுகாப்பு மற்றும் நல கமிஷன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இத்திட்டம்
 கைவிடப்படுவதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக