லேபிள்கள்

9.2.18

'பாடத்திட்டத்தில் டார்வின் கோட்பாடு நீக்கப்படாது'

 'பள்ளி மற்றும் கல்லுாரி பாடத்திட்டங்களில் இருந்து, டார்வின் 
கோட்பாட்டை நீக்கும் திட்டமில்லை' என, ராஜ்யசபாவில்,மத்திய அரசு 
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம், 

அவுரங்காபாதில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த, 
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், சத்யபால் சிங், 
'குரங்கில் இருந்து மனிதன் தோன்றவில்லை; அறிவியல் ரீதியாக, சார்லஸ் 
டார்வினின் கோட்பாடு தவறு.'மாணவர்களுக்கு சரியான பாடத்தை மட்டும் 
கற்பிக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இருந்து, டார்வின் கோட்பாட்டை நீக்க
 வேண்டும்' என பேசி, சர்ச்சையில் சிக்கினார்.இந்நிலையில், 'சி.பி.எஸ்.இ., 
பாடத்திட்டத்திலிருந்து, டார்வின் கோட்பாடு நீக்கப்படுமா?' என,
 ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''பள்ளி மற்றும் கல்லுாரி 
பாடத்திட்டங்களில் இருந்து, டார்வின் கோட்பாட்டை நீக்கும் திட்டமில்லை,'' 
என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர்,சத்யபால் சிங் 
பதில் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக