லேபிள்கள்

5.2.18

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

'எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே, 26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.நாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், 'எய்ம்ஸ்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக