லேபிள்கள்

27.3.18

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக