அரசின் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு மாணவரை தேர்வு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
.தமிழக அரசு சார்பில், 'தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம், அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்கு திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. ஏப்.,5 முதல் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், சேர்வதற்காக பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போது, பள்ளிக்கு ஒருவரை அனுப்பினால் போதும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து பேர் வீதம், மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொடுத்த நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே அனுமதி, என்ற கல்வித்துறை உத்தரவால் மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக