'மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு உயர்த்தப்பட்ட
செமஸ்டர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என மதுரை
காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் சங்க நிர்வாகிகள் பொதுக்
குழுக் கூட்டம் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராஜகோபால், பொது செயலாளர் மகேந்திரவேல்,
பொருளாளர் மாரீஸ்குமார் மற்றும் பலர்பங்கேற்றனர்.மதுரை காமராஜ்
பல்கலைக்கு உட்பட்ட சுயநிதி, அரசு உதவி பெறும் கல்லுாரி
மாணவர்களுக்கு யு.ஜி., பி.ஜி., எம்.பில்., உள்ளிட்ட படிப்புகளுக்கான
செமஸ்டர் தேர்வு கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை
ஏப்.,2க்குள் செலுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள்
அதிருப்தியில் உள்ளனர். கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்
அல்லது கட்டணம் செலுத்த 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க
வேண்டும்.'தன்னாட்சி கல்லுாரிகளில் புதிய பாடத்திட்டங்களை
பல்கலைக்கு தெரிவித்து விட்டு துவங்கலாம்' என பல்கலைமானியக் குழு
வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.'பல்கலை விதிப்படி புதிய பாடத்
திட்டங்களுக்கு அனுமதி மற்றும் இணைவிப்பும் பெற வேண்டும்' என
கல்லுாரிகளை பல்கலை வற்புறுத்துகிறது. இதனால் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.கல்லுாரிகள் எந்த விதியை பின்பற்ற வேண்டும் என்பது
குறித்து, பல்கலை மானியக் குழுவிற்கு கடிதம் எழுதி விளக்கம் பெற
வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக