தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க அரசு முதன்மை செயலர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.முகாம் பணியில் ஈடுபடும் முகாம் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் ரூ.750 யில் இருந்து ரூ.1500 ஆகவும்,
மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களுக்கு ரூ.600ல் இருந்து ரூ.1200 ஆகவும், தொடர்பு அலுவலருக்கு ரூ.200 ல் இருந்து ரூ.500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலைத்தேர்வு பணியில் ஈடுபடும் துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு உள்ளூர் ரூ.92, வெளியூர் ரூ.133, இடைநிலை தேர்விற்கு உள்ளூர் ரூ.66, வெளியூர் ரூ.106.வினாத்தாள் கட்டுக்காப்பாளர் உள்ளூர் ரூ.80, வெளியூர் 106. இடைநிலை, எட்டாம் வகுப்பு உள்ளூர் ரூ.53, வெளியூர் ரூ,80.ம் வழங்கப்படும்.தேர்வு கூட மேற்பார்வையாளர் உள்ளூர் ரூ.80, வெளியூர் ரூ.106. இடைநிலை தேர்வு உள்ளூர் ரூ.53, வெளியூர் ரூ.80. பறக்கும் படை உறுப்பினர்களுக்கு உள்ளூர் ரூ.80, வெளியூர் 106, இடைநிலை எட்டாம் வகுப்பு தேர்வு உள்ளூர் ரூ.53, வெளியூர் ரூ.80 என வழங்கப்படும். மேல்நிலை விடைத்தாள் ஒன்றிற்கு ரூ.7.50ல் இருந்து ரூ.10யாகவும், இடை நிலை விடைத்தாள் ஒன்றிற்கு ரூ.6ல் இருந்து 8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.உயர்வு நடப்பு ஆண்டு முதல் அமலாகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.4.1 கோடி கூடுதல் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக