கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை
அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி
கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2010
முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி
ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம்
வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை
செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக