லேபிள்கள்

3.4.18

'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.பிளஸ் 2 வகுப்பில், கணிதமும்,
அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பொது தேர்வுக்கு முன், 100 மையங்களில், ஒரு மாதமாக, நீட் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தேர்வு முடிந்ததால், மீண்டும் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.அதன்படி, தமிழக அரசின், 412 பயிற்சி மையங்களில், வரும், 5ம் தேதி முதல், பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. இந்த வகுப்புகளை, சிறப்பு பயிற்சி பெற்ற, 150 அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்த உள்ளனர்.இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 9,000 மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 4,000 பேருக்கு, தமிழக அரசின் சார்பில், உணவு, இருப்பிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.சென்னையில், அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே. இன்ஜி., கல்லுாரி, செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவற்றில், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்க உள்ளன.வேறு எந்த மாநிலத்திலும், நீட் தேர்வுக்காக, அரசின் சார்பில் பயிற்சி வழங்கப்படாத நிலையில், தமிழகத்தில் தான் முதன்முதலாக, கட்டணமின்றி, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக