கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன், கோவையில் நேற்று கூறியதாவது:மத்திய அரசின், 'நீட்' தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்த பின், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, 4,000 மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு, ஒன்பது கல்லுாரிகளில் தனிப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகள் மூலம், மருத்துவ துறை மட்டுமில்லாமல், எந்த துறையிலும் தேர்வை சந்திக்கும் துணிவை, மாணவர்களிடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 'நீட்' தேர்வு பற்றி மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை போல், தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக