ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த, பிளஸ் 2 தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்வு முடிவுகள், மே, 16ல், வெளியிடப்பட உள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது.கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல் உட்பட, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பாட வாரியாக தேர்வுகள் நடந்தன. பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள் எளிதாக இருந்தன. பொருளாதாரம் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால், இவற்றில் மட்டும், மதிப்பெண் குறையும் என, மாணவர்கள் கவலையில் உள்ளனர்.அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, ஏப்., 2ல், தேர்வுகள் முடிந்து விட்டன. கணினி அறிவியல், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், அட்வான்ஸ்டு தமிழ் போன்ற பாடங்களுக்கு, இன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்துடன், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள், முழுமையாக முடிவுக்கு வருகின்றன. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக