என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர்கள் முறைகேடாக சேர்க்கப்படுவதை தடுக்க, வரும் கல்வி ஆண்டில், அனைத்து பல்கலைகளிலும்,
விதிகளை மாற்ற உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள, அனைத்து பல்கலைகளிலும், நுழைவு தேர்வு மற்றும் கவுன்சிலிங் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, மாணவர்களின் முந்தைய வகுப்பு மதிப்பெண், தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறை உட்பட, பல விதிகள் பின்பற்றப்படுகின்றன.ஒவ்வொரு பல்கலையிலும், மொத்த இடங்களில், 5 முதல், 10 சதவீத இடங்கள், என்.ஆர்.ஐ., என்ற, வெளிநாடு வாழ் தமிழர்கள், வளைகுடா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படுகின்றன. இதற்காக, பல்வேறு விதிகள் பின்பற்றப்படுகின்றன. இந்த விதிகள், பல்கலைக்கு பல்கலை மாறுபடுவதால், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில், அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியினர், அதிகாரிகளின் சிபாரிசு பெறுவோருக்கு, எளிதாக சீட் கிடைக்கிறது.அந்த வகையில், தமிழ்நாடு சட்ட பல்கலையில், முடிந்த கல்வி ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையில், முறைகேடு நடந்துள்ளதை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி மற்றும் ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.இதேபோல, அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையிலும், முறைகேடு நடந்துள்ளதா என, விசாரணை துவங்கியுள்ளது. இந்த பிரச்னையை தொடர்ந்து, குளறுபடிகளை தடுக்க, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, வெளிப்படையான ஆன்லைன் கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, உயர்கல்வி, சட்டத்துறை, மருத்துவம், கால்நடை மருத்துவ கல்வி, தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின், செயலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் உள்ள, பல்கலை அதிகாரிகள், கூட்டு ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளனர். கவர்னரின் ஆலோச னைப்படி, புதிய விதிகளை அமல்படுத்தவும், உயர்கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக