''தேர்வு முடிவுகள் வெளியான, அடுத்த இரண்டு நிமிடங்களில், மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே, பி.கே.வேலம்பாளையம் சாலையில், அரசு நிதியுதவியுடன் இயங்கும் பாரதியார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சிறப்பு பயிற்சி பள்ளியின் துவக்க விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர், செங்கோட்டையன், கூறியதாவது:மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்து, பெற்றோர் கவலைப்படதேவையில்லை. அந்த குழந்தைகளுக்கும் திறமை, ஆற்றல் உள்ளது. மாற்றுத்திறனாளிகளாக உள்ள குழந்தைகளுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதுடன், தற்போது ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.காது கேளாதவர்களுக்கு நுாலகம் வாயிலாக புத்தகங்கள் வழங்கி, படிப்பதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களுக்கு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி வெளியாகும். தேர்வு முடிவு அறிவித்த இரண்டு நிமிடங்களில், மாணவர்கள் அளித்த மொபைல் எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதனால், தேர்வு முடிவு குறித்து, மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக