பள்ளி மாணவர்கள் மீசை வளர்ப்பதற்கு, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி பரவி வருகிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக, 'வாட்ஸ் - ஆப்'பில், தகவல் பரவியது. அதிலுள்ள தகவல்கள்:
*காலை, 9:15 மணிக்குள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்* 'லோ ஹிப், டைட் பிட் பேண்ட்'கள் அணிந்து வர அனுமதி இல்லை* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்; சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது* மாணவர்கள் அணியும் சட்டையின் நீளம், 'டக் இன்' செய்யும் போது, வெளியில் வராமல் இருக்க வேண்டும்* சீரற்ற முறையில், 'இன்' பண்ணக் கூடாது. கறுப்பு நிற சிறிய, 'பக்கிள்' உடைய, 'பெல்ட்' மட்டுமே அணிய வேண்டும்* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்* கைகளில் ரப்பர், கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவை அணிந்து, பள்ளிக்கு வரக்கூடாது* பெற்றோர் கையொப்பத்துடன், விடுப்பு கடிதம் கொடுத்து, வகுப்பாசிரியர் அனுமதி பெற்று, விடுமுறை எடுக்க வேண்டும்* பைக், மொபைல்போன், ஸ்மார்ட் போன்களை, பள்ளிக்கு எடுத்து வர அனுமதி இல்லை. மீறினால், பறிமுதல் செய்யப்படும்; திரும்ப ஒப்படைக்கப்படாது* பிறந்த நாள் என்றாலும், மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, 'வாட்ஸ் ஆப்' தகவலில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்பில் பரவுவது வதந்தியே. இதுபோன்ற சுற்றறிக்கை எதையும், நாங்கள் அனுப்பவில்லை' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக