லேபிள்கள்

2.5.18

கல்விகட்டணத்தை வெளியிடாததால் குழப்பம்

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரத்தை, அரசு அறிவிக்காததால், பல இடங்களில், அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சார்பில், ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும், கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டண விபரங்கள், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.இந்த விபரங்களை, பெற்றோர் அறிய முடியும். பள்ளிகளும், கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது. இந்த ஆண்டில், சென்னையில் பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. மற்ற மாவட்டங்களில், மாணவர் சேர்க்கைக்கு, அதிக கட்டணம் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும், அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பது குறித்து, தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககம் சார்பில், விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதனால், பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை, பெற்றோரால் மறுக்க முடியவில்லை. இந்த குழப்பத்தை போக்க, 'வரும் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டண விபரங்களை, பள்ளி வாரியாக, இணையதளத்தில் வெளியிட வேண்டும்; பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக