உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கீகாரம் இல்லாத மற்றும் பாதுகாப்பற்ற பள்ளிகளை கண்டறிய, 90 கேள்விகளுடன், ஆய்வுக்குழுவினர், தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர், தீயணைப்பு அதிகாரி, சுகாதார அதிகாரி ஆகியோர் அடங்கிய, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த குழுவினர், மே, 16 முதல், பள்ளி வாரியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அங்கீகாரம் இல்லாத, பாதுகாப்பற்ற பள்ளிகளை கண்டறியும் வகையில், 90 கேள்விகள் அடங்கிய, வினாத்தாளை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது.* பள்ளியில் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை விபரம்; எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது; பள்ளிக்கல்வித்துறை அங்கீகாரம் மற்றும் சிறுபான்மை அந்தஸ்து பெறப்பட்டு உள்ளதா; அதன் சான்றிதழ் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்* பொது கட்டடத்துக்கான சான்றிதழ், பொதுப்பணித் துறையிடமிருந்து, கட்டட உறுதி சான்றிதழ் பெறப்பட்டதா; கட்டடத்தின் உள்பக்க அளவு என்ன; திறந்த வெளி இடம். * விளையாட்டு மைதானம், ஆய்வகம், நுாலக வசதிகள், தீ விபத்து பாதுகாப்பு வசதிகள் உள்ளதா; பள்ளி கட்டடம் கல்வி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா என, கேட்கப்பட்டுள்ளது*தண்ணீர் வசதியுடன் கழிப்பறை, போதிய குடிநீர் வசதி உள்ளதா; மின் உபகரணங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா என கேட்கப்பட்டுள்ளது. *போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா; மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா; கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்றும் கேட்கப்பட்டுள்ளது*தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் விதிப்படி, ஆசிரியர்கள் நியமனம் நடந்துள்ளதா; மாணவர் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளனவா என, கேட்கப்பட்டுள்ளது.* மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறதா; மாணவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கும் வகையில், தண்டனை வழங்கப்படுகிறதா; கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறா என்பது போன்ற கேள்விகளும் இடம் பெற்றுள்ளன.இதற்கு சரியான பதில்களை, உரிய ஆவணங்களுடன், பள்ளிகளிடம் பெற வேண்டும் என, ஆய்வு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிடுக்கிப்பிடி ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பல தனியார் பள்ளிகள் முயற்சித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக