லேபிள்கள்

19.6.18

'தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்'

''தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது,'' என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை கமிஷனர் மணி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில், புதுச்சேரி உட்பட, 50, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, வெளியான பிளஸ் 2 தேர்வில், ஐ.சி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., பாடப்பிரிவு பள்ளி களை விட கே.வி., பள்ளிகள் அதிகபட்சம், 97.78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன. தற்போது, 'டர்ணோத்ஷவா' என்ற திட்டம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 1 செல்லும் முன் மொழி, விளையாட்டு, யோகா, கவுன்சிலிங், சேவை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் அளிக்கப்படும்.மதுரை உட்பட சில இடங்களில், 11 கே.வி., பள்ளிகள் துவங்க, பரிசீலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக