தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும்.
இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்-வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உப-ரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறிய-தாவது:மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற விதிமீறலால் ஆசிரியர் பணியிடங்கள் இழக்கப்பட்டுள்-ளன. இங்கிருந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் மட்டும் 5 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் 150 ஆசிரியர் பணி-யிடங்கள் இதுபோல் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விதிமீறல் பணிநிரவலை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக