எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
மருத்துவ படிப்புகளில், சேருவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. இதுவரை, 36 ஆயிரத்து, 859 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும், 18ம் தேதி வரை, விண்ணப்பங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பெறலாம் அல்லது, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 19க்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்ததா என்பதை, www.tnmedical selection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையதள பக்கத்தில் உள் சென்று, விண்ணப்ப படிவத்தின் எண் அல்லது, 2018, 'நீட்' தேர்வின் வரிசை எண் என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
நாளை கடைசிகால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில், 14 ஆயிரத்து, 525 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'தலைவர், சேர்க்கை குழு, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம், பால் பண்ணை, சென்னை - 51' என்ற முகவரியில், நாளை மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக