லேபிள்கள்

20.6.18

ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு தேதி மாற்றம்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 22 முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்திருந்தது. தேர்வுக்கான மொழிகளில், மாநில மொழிகள் ரத்து செய்யப்பட்டு, பின், திடீரென சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே, 'ஆன்லைன்' பதிவு விண்ணப்பத்தில், மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.அதனால், '22ல், துவங்கவிருந்த, ஆன்லைன் பதிவு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது; புதிய தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக