லேபிள்கள்

19.6.18

இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல்

'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ளவர்கள்,
விடைத்தாள் நகல் பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல் முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விடைத்தாள் நகல் பெற்றவர்கள், அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் உள்ள, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 20 முதல், 22க்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக