லேபிள்கள்

18.6.18

இடமாறுதல் கவுன்சிலிங்கில் விதிமீறல்: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் கூறி, புதுக்கோட்டையில் ஆசிரியர்கள்,
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைனில் பணிமாறுதல் கவுன்சிலிங், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங், நேற்று நடந்தது. அப்போது, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள், விதிமுறைகளை பின்பற்றாமல், மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார் கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிகளை மீறி மாறுதல் கவுன்சிலிங் நடத்தும், புதுக்கோட்டை, சி.இ.ஓ., வனஜாவைக் கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், லஞ்சம், ஊழல் முறைகேடுகளுக்கு உள்ளாகியுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை போராட்டம் தொடர்ந்தது. கணேஷ் நகர் போலீசார், ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக