லேபிள்கள்

21.6.18

அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு : பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

நள்ளிரவில் துவங்கி அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்
பேட்ரிக் ரெய்மண்ட் கோரியுள்ளார்.ஆசிரியர்கள் கலந்தாய்வு ஜூன் 12 ம் தேதி முதல் நடக்கிறது. 19ல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் காலை 9:00 மணிக்கு துவங்கிய கலந்தாய்வு இரவு வரை நடக்க வில்லை. ஆசிரியைகள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:பள்ளிக்கல்வி துறையில் கலந்தாய்வில் ஆசிரியர்களை நள்ளிரவு வரை காக்க வைத்து அலைக்கழிக்கும் போக்கை கண்டிக்கிறோம். 19 ம் தேதி காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் என பட்டதாரி ஆசிரியர்களை வரவழைத்து இரவு 11:00 மணிக்கு துவங்கியது. இரவு 12:30 மணி வரை பணியிடங்களை தேர்ந்தெடுத்தனர். கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரை விடிய, விடிய காக்க வைத்து கலந்தாய்வு ஏன் நடத்த வேண்டும். ஆசிரியர் நலனை சிறிதும் கவனிக்காமல் அலட்சிய போக்கில் நடந்து கொள்கின்றனர்.
அதிகாரிகள் மெத்தன போக்கால் அரியலுார் மாவட்டம் திருமனுார் லெனின் விபத்தில் பலியானார். இச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக