பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள் சேருவதை விட என்ஜினீயரிங்
கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது.
அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது.
கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.
இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக