லேபிள்கள்

7.11.13

விளையாட்டுக்கு அறிவித்த ரூ.10 கோடி என்னாச்சு: பள்ளிகள் எதிர்பார்ப்பு

நிதி நெருக்கடியால், விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாமல் திணறும் பள்ளிகள், அரசு அறிவித்த ரூ.10 கோடியை எதிர்பார்த்துள்ளன.


பள்ளிக் கல்வித்துறை மூலம் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு, அரசு ரூ.10 கோடி வழங்கும் என, முதன் முறையாக அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் குறுவட்ட அளவில் போட்டிகள் நடத்த ரூ.2.64 கோடி, கல்வி மாவட்ட அளவில் ரூ.79.83 லட்சம், மண்டல பழைய விளையாட்டுகளுக்கு ரூ.1.29 கோடி, புதிய விளையாட்டுகளுக்கு ரூ.1.42 கோடி, மாநில குடியரசு தின போட்டிகளுக்கு ரூ.26.17 லட்சம், புதிய விளையாட்டுகளுக்கு ரூ.81.13 லட்சம், தேசிய பள்ளிகள் விளையாட்டு குழும போட்டிகளுக்கு ரூ.1.79 கோடி என, நிதி ஒதுக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது.


மாவட்டங்களில் குறுவட்ட, கல்வி மாவட்ட, மண்டல போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆறு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தலைக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தும் பள்ளிக்குத் தரவேண்டும். நிறைய அரசுப் பள்ளிகளில், இத்தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. போட்டிகளை நடத்தும் பள்ளி ஆசிரியர்கள், தனியாரிடம் "ஸ்பான்சர்' கேட்டு அலைகின்றனர். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மண்டல அளவிலான போட்டிகள் வரை நடத்தப்பட்டு விட்டன. அரசு அறிவித்த தொகை இன்னும், மாவட்டங்களுக்கு வந்து சேரவில்லை. நவ., 28 - 30 வரை, குடியரசு தின விழா குழுப் போட்டிகள், மதுரையில் நடத்தப்படுகின்றன. மாநில போட்டிகள் முடிவதற்குள், அறிவிக்கப்பட்ட தொகை வழங்கப்பட்டால், மாணவர்களுக்கு பரிசும், பலனும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக