தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து,
எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், தமிழ் வாசிப்புத் திறன், மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில், 'பள்ளிகள் இல்லாத, தொலை தூர குடியிருப்பு பகுதிகளில், புதிய பள்ளிகள் துவங்க, கருத்துரு அனுப்பவும், ஆசிரியரல்லாத பள்ளிகளில், உடனடியாக, ஆசிரியர்களை நியமிக்கவும், தமிழ்வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக