லேபிள்கள்

7.11.13

தற்கொலைக்கு முயன்ற 7 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

மதுரைஅருகே உள்ள கள்ளந்திரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பு படிப்பவர்கள் செல்வி (வயது 12), மெய்யம்மாள் (12), ஜெயந்தி (12), வினிதா (12), ஜெகதீஷ்வரி (12), சிவனேஸ்வரி (12), ஆழி (12). இவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்த போது தலைமை ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த அவர்கள் வாழைப்பழத்தில், பேன் மருந்து கலந்து 7 மாணவிகளும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த 7 மாணவிகளும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக