லேபிள்கள்

4.11.13

பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்

மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற பெயரில் ஒரு மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக் குழந்தைகளின் ஏற்றத்தாழ்வற்ற கல்வி உரிமையைக் கொச் சைப்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மக்கள் பணத்தை விழுங்க உதவும் கல்வி உரிமைச் சட்டம் என்பதாக ஒன்றைக் கொண்டுவந்தது இந்த அரசு.
அந்தச் சட்டத்தின்படி, சமூக அடிப் படையிலும் பொருளாதாரத்திலும் ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தனியார் நிர்வாகங்கள் நேர்மையாக இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதிலிருந்து படிப்பினை பெறுவதற்கு மாறாக, தனியார் வேட் டைக்குத் தோதாக வலையமைக்கிற வேலை யாக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.நாடு முழுவதும் 2,500 மாதிரிப்பள்ளிகளை அமைக்கும் திட்டம் இது.

தமிழகத்தில் 356 பள்ளிகள் வரும். மாநிலப் பள்ளிக் கல்வி வாரி யத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டம்தான் இந்தப் பள்ளிகளில் கொண்டுவரப்படும். அது மட்டுமல்ல, இவைஅரசு-தனியார்-பங்கேற்பு” (பிபிபி) என்ற அடிப்படையில் இயக்கப்படும். ஏற்கனவே செய்திகளில் வந்துள்ள எதிர்மறை அம்சங்களோடு, அரசு ஒதுக்கீட்டின்படி சேர்க் கப்படும் 40 சதவீத குழந்தைகளிடமிருந்து, 9ம் வகுப்புக்கு மேல் மாதம் 50 ரூபாய், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றால் 25 ரூபாய் கட்ட ணம் வசூலிக்க நிர்வாகங்கள் அனுமதிக்கப்படு கின்றன

இலவசமாகக் கொடுத்தால் மதிக்க மாட்டார்கள் என்ற மட்டமான முதலாளித்துவச் சிந்தனைதான் இந்த ஏற்பாட்டின் பின்னணி.நிர்வாக ஒதுக்கீட்டின்படியான 60 சதவீத குழந்தைகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட் டணத்தையும் மாநில அரசு நிர்ணயிக்க முடி யாது. தனியார் நிர்வாகங்களேசந்தை நிலவரத் தின்அடிப்படையில் நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கிறது இந்தத் திட்டம்! பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகங்கள் சிபிஎஸ்இ முறைக்கு மாறப்போவதாகக் கூறுவதற்கான காரணம் இந்த அனுமதிக்குள் இருக்கிறது.

இப்பள்ளிகளின் பயிற்றுமொழி விசயத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. தமிழகத்தில் நீண்ட போராட்டத்தின் பலனாக, தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருக்கும் என்ற ஆணை பிறப் பிக்கப்பட்டது. அந்த ஆணையைப் பரிகாசம் செய்கிறது இந்தத் திட்டம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பள்ளிகளுக்கான 25 சதவீத மானியச் சுமையை மாநில அரசுதான் ஏற்க வேண்டும்.மாநில உரிமை மீறல், மாநில மொழி மறுப்பு, தனியார் வர்த்தக ஆதிக்கம் என்ற முப்பெரும் தாக்குதல்கள் இந்த சிபிஎஸ்இ-பிபிபி திட்டத் தில் பொதிந்திருக்கின்றன. இத்திட்டத்திற்கு ஆட்சேபணை இருக்குமானால் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


பள்ளிகளி டையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிற, ஏற் கனவே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளோடு இணைந்த மாதிரிப்பள்ளிகளை வலுப்படுத்த உதவாத இந்தத்திட்டத்திற்குத் தமிழக அரசு தனது எதிர்ப்பை வலுவாக எழுப்பிட வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர் அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் இப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராட்டக்களத்தில் முன்நிற்பதே மத்திய அரசைப் பின்வாங்க வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக