தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இதன்படி சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மென்ட்) படிப்பு, முதுகலையில் பொது நிர்வாகப் படிப்புக்கு (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., வளர்ச்சி நிர்வாகம் (டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் (ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு), எம்.ஏ., பொது நிர்வாகம் (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) படிப்புக்கு இணையானது.
சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.எஸ்சி., பயன்பாட்டு புவியியல் (அப்ளைடு ஜியாக்ரபி) படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி., புவியியல் (ஜியாக்ரபி) படிப்பு. மேலும் சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., தமிழ் இலக்கியப் படிப்புக்கு (தமிழ் லிட்டரேச்சர்) இணையானது எம்.ஏ., தமிழ் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக