பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட, 25 அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை மாதம், குமரி முதல் சென்னை வரை, கவன ஈர்ப்பு நடைபயணம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில், அவர் கூறியதாவது: கடந்த, 2004க்கு பின், பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்- ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களுக்கு என, மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும். பல துறைகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கு மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
இவை உட்பட, 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர் ஜெ.,யின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜூலை மாதம், 100 இளைஞர் படையினரை திரட்டி, குமரி முதல் சென்னை வரை, கவன ஈர்ப்பு நடைபயணம் நடைபெற உள்ளது. அதற்கு முன், ஆயத்த மாநாடுகள், நெல்லையில், ஜூன், 8ல், ஈரோட்டில், ஜூன், 15ல், திருச்சியில், ஜூன், 22ல், வேலூரில், ஜூன், 29ல் நடைபெறவுள்ளன. இவ்வாறு, சண்முகராஜன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக