லேபிள்கள்

20.2.14

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன "கவுன்சிலிங்'

""ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன
கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். 

அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில், காலை, 10:00 மணி முதல், இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின், பணி நியமன உத்தரவு 
வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில்,""தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும், எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக