லேபிள்கள்

20.2.14

ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை வெளியிட்டார் முதல்வர்

ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி
பெற்றுக் கொண்டார்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில  திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன.  அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம்  ஒன்று ஆசிரியர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர்களும் மாணவர்களும் இக்கட்டகத்தை படிக்கும் போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் இக்கட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் ம ப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக