முதுகலை
ஆசிரியர் தேர்வில்,
நேற்று இரவு,
திடீரென, ஏழு
பாடங்களுக்கான தேர்வு
முடிவை, ஆசிரியர்
தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.
அரசு
மேல்நிலை பள்ளிகளில்,
2,895 முதுகலை ஆசிரியரை
நியமனம் செய்யும்
பணி, பல
மாதங்களாக, இழுபறி
நிலையில் இருந்து
வந்தது. இன்று
காலை, தமிழ்பாட
ஆசிரியர்களுக்கு மட்டும்
முதல்வர் ஜெயலலிதா
பணி நியமன
உத்தரவை வழங்கும்
நிலையில், நேற்று
இரவு, திடீரென,
விலங்கியல், புவியியல்,
மைக்ரோ பயாலஜி,
உடற்கல்வி இயக்குனர்,
ஹோம்சயின்ஸ், பயோ
கெமிஸ்ட்ரி ஆகிய
பாடங்களுக்கான இறுதி
தேர்வு முடிவு
www.trb.tn.nic.in என்ற, இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் விழா
நடைபெறுவதால், அவசர,
அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது
என, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், கணிதம்,
உயிரியல், ஆங்கிலம்
உள்ளிட்ட, சில
பாடங்களுக்கு, கோர்ட்டில்
வழக்கு நிலுவையில்
இருப்பதால், அதன்
முடிவு வெளியிடவில்லை
என, கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக